மூத்த நடிகர் ஓம்புரி மறைவிற்கு பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் இரங்கல்
இந்தியாவின் மூத்த நடிகரும், திரையுலக பங்களிப்புக்காக பிரிட்டனின் கெளரவ விருதை பெற்றவருமான ஓம்புரி தன்னுடைய 66 வது வயதில் மும்பையில் காலமானார்.நேற்று அதிகாலையில் மும்பை நகரிலுள்ள அவருடைய இல்லத்தில் அவர் இறந்ததாக குடும்ப உறுப்பினர் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
பிரிட்டனில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய “ஈஸ்ட் இஸ் ஈஸ்ட்” திரைப்படத்தின் நட்சத்திர நடிகர் இவராவார். பிரிட்டிஷ் திரைப்பட துறைக்கு ஓம்புரி வழங்கிய பங்கை பாராட்டி அவருக்கு பிரிட்டன் அரசி வழங்குகின்ற மரியாதைக்குரிய ஒபிஇ (OBE – பிரிட்டிஸ் பேரரசில் சிறந்த அலுவலர்) விருது 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
திரைப்பட தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட விருதுகளையும் ஓம்புரி பெற்றுள்ளார். இந்தியில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், பஞ்சாபி, தமிழ் என பல்வேறு மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஓம்புரி மறைவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷெரீப், “மறைந்த ஓம்புரி இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கலாச்சார உறவிற்கு இணைப்பு பாலமாக திகழ்ந்தார்.
பாகிஸ்தான் படங்களில் முக்கியமான பங்களிப்பை செலுத்தி உள்ளார். பாகிஸ்தான் மக்கள் மற்றும் அரசின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply