ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பதற்றம்

நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் தற்பொழுது கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பல ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பாந்ட்டையின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்த நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதேசத்திற்கு அண்மையில் சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்தே, ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட அரசின் காணிகளை வெளிநாட்டவருக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கூட்டு எதிர்க் கட்சி ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் இன்று(07) ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்துக்கு அருகில் இடம்பெறுகின்றது. இதில் சுமார் 2 ஆயிரம் பிக்குகள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply