அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வெள்ளம் – ஐரோப்பிய நாடுகளில் கடும்பனி: பொதுமக்கள் அவதி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வெள்ளமும், ஐரோப்பிய நாடுகளில் கடும் பனியும் நிலவுகிறது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வடக்கு பகுதி, சியர்ரா நவேடா பகுதிகளில் உள்ள மலை பிரதேசங்களில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.இதனால் பனி உறைந்து கிடந்த ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ரோடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கலிபோர்னியா மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
வடக்கு கலிபோர்னியா மற்றும் மேற்கு நிவேடாவில் 40 ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு கரைகளுக்கு மேல் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் ஐரோப்பாவில் கடும் பனி கொட்டுகிறது. போலந்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். துருக்கியில் ஆயிரக்கணக்கான மக்கள் பனியால் சிக்கி தவிக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. குடிபெயர்ந்தோர் மற்றும் வீடுகள் இல்லாதோர் பனிக்குள் உறைந்து இறந்து கிடக்கின்றனர்.
கடுமையான உறைபனி காரணமாக இஸ்தான்புல் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply