ரஷ்யவுடன் எந்த உறவும் இல்லை: செய்தியாளர்களுடன் முதல் முறையாக பேசிய டிரம்ப் திட்டவட்டம்
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார். இதனையடுத்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக இன்று டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ரஷ்யவுடன் எந்த உறவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது:-
கடவுளால் கூட உருவாக்கப்பட்டதை விட அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்குபவனாக நான் இருப்பேன்.
ரஷ்யாவுடன் எனக்கு உறவு இருப்பதாக வெளியாகும் ஆவணங்கள் போலியான செய்திகள். வலிமை குறைந்த ஆட்களால் உருவக்கப்படும் போலிகள் அது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் டொனால்டு டிரம்பை விரும்பினால் அது நன்மைக்காக தான். பொறுப்பு அல்ல. ரஷ்யா உடன் எந்த ஒப்பந்தமும் இல்லை. ரஷ்யாவிலும் எந்த ஒப்பந்தமும் இல்லை.
என்னுடைய தொழில்கள் அனைத்தையும் இரு மகன்கள் பார்த்துக் கொள்வார்கள். அதில் வரும் சிக்கல்கள் குறித்து என்னுடன் விவாதிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply