வரிச்சலுகை நீக்கப்பட்டதனால், நாட்டுக்கு நஷ்டம் ஏற்படவில்லை : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கையின் GSP+ வரிச்சலுகை நீக்கப்பட்டதனால், நாட்டுக்கு நஷ்டம் ஏற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவின் நலம் விசாரிக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று திரும்பும் போது, ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் GSP+ வரிச்சலுகை மீண்டும் கிடைக்கப்பெற்றமை நாட்டுக்கு நல்லது என்றால் அது தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு கிடைக்கப்பெற்றிருந்த GSP+ வரிச்சலுகை 2007 ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதேவேளை, 2010 ஆம் ஆண்டு முற்றாக நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply