‘அணு ஆயுதங்களை குறைத்தால் பொருளாதார தடைகள் நீக்கப்படும்’ ரஷியாவுக்கு, டிரம்ப் அறிவுறுத்தல்

உக்ரைன், சிரியா விவகாரங்களில் தலையிட்டதால் ரஷியா மீது ஒபாமா நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து இருந்தது. இந்த தடைகள் கடந்த மாதம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. இது ரஷியா-அமெரிக்கா உறவில் விரிசலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப், ரஷியாவுக்கு சலுகைகள் வழங்க முன்வந்துள்ளார்.

 

இது தொடர்பாக ‘டைம்ஸ் ஆப் லண்டன்’ பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், ‘ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இவற்றை நீக்குவதற்காக ரஷியாவுடன் சிறந்த ஒப்பந்தங்களை போடுவதற்கு எங்களால் முடியும் என்றால் பார்ப்போம். ஆனால் ஒரு விஷயம், ரஷியா அணு ஆயுதங்களை கணிசமாக குறைக்க வேண்டும், அது நிச்சயம் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

 

சிரியா போரில் ரஷியா தலையிட்டதை கடுமையாக விமர்சித்த டிரம்ப், ‘அது ஒரு மோசமான செயல்’ என வர்ணித்தார். சிரியா போரில் ரஷியாவின் தலையீட்டால் பயங்கர மான மனிதாபிமானமற்ற நிலை உருவாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply