8 கோடீசுவரர்கள் கையில் உலகின் பாதி சொத்துக்கள்: பொருளாதார அமைப்பு தகவல்
சர்வதேச பொருளாதார அமைப்பு தொடக்க விழா இங்கிலாந்தின் டாவோஸ் நகரில் நடந்தது. அதில் உலக அளவில் உள்ள சொத்துக்களில் பாதி அளவு 8 கோடீசுவரர்களின் கையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்களில் 6 பேர் அமெரிக்க வர்த்தகர்கள் தலா ஒருவர் ஸ்பெயின் மற்றும் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 743 கோடி டாலர்.
அவரை தொடர்ந்து ஸ்பெயினின் அமான்சியோ ஆர்டேகா சொத்து மதிப்பு (ரூ.663 கோடி டாலர்). 2-வது இடத்திலும், அமெரிக்காவின் வாசன் பப்பெட் (602 கோடி டாலர்) 3-வது இடத்திலும், மெக்சிகோவின் கார்லஸ் ஸ்லிம் ஹீலு (494 கோடி டாலர்) 4-வது இடத்திலும்,
மேலும் அமெரிக்காவை சேர்ந்த அமேசான் டாட்காம் தலைவர் ஜெய் பெஷோஸ் (448 கோடி டாலர்), 5-வது இடத்திலும், பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஷுக்கர்பெர்க் (441 கோடி டாலர்) 6-வது இடத்திலும், ஒரகில் தலைமை அதிகாரி லார்ரி எல்லிசன் (412 கோடி டாலர்) 7-வது இடத்திலும், நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம் பெர்க் (396 கோடி டாலர்) 8-வது இடத்திலும் உள்ளனர்.
இதனால் உலக பொருளாதாரத்தில் சமநிலை இல்லாத சூழ்நிலை ஏற்படும் என உலக பொருளாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply