நைஜீரியாவில் அகதிகள் முகாமில் ராணுவ விமானம் தவறுதலாக குண்டு வீச்சு: 100 பேர் பலி
நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணுவம் பல்வேறு கட்ட பதில் தாக்குதல்களை நடத்துகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியில் அகதிகள் முகாம் மீது ராணுவ விமானப் படையை சேர்ந்த ஜெட் விமானம் தவறுதலாக குண்டு வீச்சை நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
தாக்குதலுக்கு ஆளானவர்களில் முகாமில் சேவை செய்து கொண்டிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் நல உதவியாளர்களும் அடங்குவர்.
ராணுவ கமாண்டர் மேஜர் ஜெனரல் லக்கி இரப்பார் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார். கேமரூனுக்கு எல்லைப் பகுதியில் சுமார் நூற்று ஐம்பது கிலோமீட்டர் தொலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து குண்டு வீச்சு தாக்குதலுக்கு ஆளான முகாம் பகுதியில் அரசு தரப்பினர் விரைந்து மீட்பு ஈடுபட்டனர். நைஜீரிய அரசு தரப்பில் நடந்துள்ள மிகப்பெரிய முதல் தவறுதல் இது என்று கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply