ஜனாதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுப்போம்: இளைஞர்களிடம் அமைச்சர்கள் உறுதி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரவமடைந்ததை தொடர்ந்து இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வந்தது. போராட்டக்குழு சார்பில் 10 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியஜராஜன் பங்கேற்றனர்.
பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் இல்லத்தில் இளைஞர்கள் குழுவினருடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 30 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.
பேச்சுவார்த்தை முடிந்து செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறியதாவது:-
தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து போராட்ட குழுவினரிடம் தெரிவித்தோம்.
காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும், அவசர சட்டம் கொண்டு வர வேண்டும், பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிந்த அளவிற்கு தேவையாக அழுத்தம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்ட குழுவினர் முன் வைத்துள்ளனர்.
தமிழக முதல்வர் உடனடியாக ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும். ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்.
முதல்வரிடம் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களின் கோரிக்கையை தெரிவித்தோம். ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும்.
உங்கள் போராட்டத்தை எங்கள் போராட்டமாக விட்டு விட்டு போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். முதல்வரின் அறிக்கைக்கு உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply