சோமாலியாவில் 40 லட்சம் பேர் பட்டினியால் தவிக்கும் அபாயம்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடந்த 60 ஆண்டுகளாக அடிக்கடி மழை இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டு இங்கு ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் 3 லட்சம் பேர் பலியானார்கள்.இதைத்தொடர்ந்து ஐ.நா. சபையும், சர்வதேச நாடுகளும் ஏராளமான உதவிகளை செய்தன. இதனால் மக்கள் பட்டினியில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மீண்டும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அங்கு பல்வேறு தீவிரவாத குழுக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் ஐ.நா. சபை உள்ளிட்டவை கொண்டு சென்ற உணவு பொருட்கள் கூட பொதுமக்களுக்கு சென்றடையவில்லை. இதனால் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் பட்டினியால் உயிரிழந்தனர்.
இப்போது மீண்டும் அதேபோன்ற வறட்சி சோமாலியாவில் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. எனவே விவசாய உற்பத்தி முற்றிலும் முடங்கி இருக்கிறது. ஆடு, மாடுகளுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லை, உணவு இல்லை. எனவே அவை செத்து மடிகின்றன.
தற்போதுள்ள நிலையில் 40 லட்சம் பேர் பட்டினியால் தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. மனிதநேய அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த பட்டினியை தவிர்க்க உடனடி உதவி தேவைப்படுவதாகவும், இதற்கு மட்டுமே ரூ.4500 கோடி பணம் தேவைப்படும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
பட்டினியை தவிர்ப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் ஐ.நா.சபை செய்து வருகிறது. சர்வதேச நாடுகளின் உதவிகளையும் இதற்காக கேட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply