ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர், ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். சட்டவரைவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசின் உயர்அதிகாரிகள் இதற்கான பணிகளை விரைந்து செய்வதாக முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் தயாராக உள்ளதாக முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். எனவே மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply