25 வருட ஆய்வின் பின் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை

தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும், குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் 21.01.2017 அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்தே இந்த அறிமுக விழா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை தேயிலை பயிர் செய்கையின் 150 வது ஆண்டு நிறைவு மற்றும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் 92 வது ஆண்டு நிறைவை முன்னிட்டே இவ்விழா முன்னெடுக்கப்பட்டது.

தேயிலை பயிர்செய்கையின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தேயிலைதுறை தொடர்பில், புத்தகம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம், அமைச்சர் நவின் திஸாநாயக்க, கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்னன் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply