தமிழர்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு: பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ராதா ராஜன்
சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த ராதா ராஜன் அளித்த பேட்டியில் சென்னை மெரினாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இழிவு படுத்தும் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து பொது மக்கள் மற்றும் சமூக வலைத்தள வாசிகள் அவர் மீது கோபம் கலந்த தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ராதா ராஜன், தான் தெரிவித்த கருத்திற்கு பொது மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது.
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் துவங்கும் முன்பே சர்வதேச செய்தி நிறுவனம் என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன். அதில் நான் தெரிவித்த பதிலை பொது மக்கள் தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டுள்ளனர்.
நான் தெரிவித்த கருத்து பொது மக்களை காயப்படுத்தியுள்ளது என்பதையறிந்து வருத்தம் கொள்கிறேன், இதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இதோடு எனது கருத்து யாரையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் நான் தெரிவிக்கவில்லை, நான் அளித்த பதில் ஜனநாயகம் மற்றும் நீதிமன்றம் சார்ந்த கருத்தே ஆகும். என அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply