அமைச்சர் வி.முரளிதரன் அவர்களின் மக்கள் தொடர்பாளர் ரஞ்சன் அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தி
என் அன்பார்ந்த தமிழ் உறவுகளே கடந்த மூன்று தசாப்பதங்களாக நாம் அனுபவித்து வந்த துன்ப, துயரங்கள் நீங்குவதற்க்கான காலம் மலர்ந்து விட்டது, போராட்ட வரலாற்றுப் பாதை முடிவுற்று ஜனநாயக பாதையில் மக்கள் அமைதிக்கான, சுதந்திரத்திற்கான, அவர்களின் வாழ்க்கை அபிவிருத்திக்கான பணியில் இன்று நாம் கால் பதித்துள்ளோம். தமிழ் பேசும் வட,கிழக்கு மக்களாகிய நாம் சூறாவளி, சுனாமி, இனக்கலவரம், ஆயுதப்போராட்டம், இவை போன்றவைகளால் பாதிக்கப்பட்டோம். உயிர் இழந்தோம், உறவுகள் இழந்தோம், உடமை இழந்தோம், வாழ்ந்த தாய்மண்னை இழந்தோம் இனி இழப்பதற்கு என்ன இருக்கிறது.. எனவே நம்மின மக்களுக்காக புதியதொரு ஜனநாயக அரசியல் வழியில் அமைச்சர் கருணாஅம்மான் அவர்களுடன் இணைந்து புதியதோர் தேசத்தை கட்டியெழுப்புவோம். மலரும் இப் புதுவருடம் அனைத்து தமிழ் மக்களுக்கும் சாந்தியும் , சமாதானமும் கிடைக்கட்டும். நன்றி ரஞ்சன், மக்கள் தொடர்பாளர், தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சகம்
தகவல் – கதிரொளியன் ஊடகப்பிரிவு, தேனகம்
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply