இத்தாலியில் மீட்பு பணி ஹெலிகாப்டர் மலையில் மோதி 6 பேர் பலி

இத்தாலியில் கடந்த வாரம் கிரான் சாஸ்கோ மலைப் பகுதியில் பனிப்பாறைகன் சரிந்ததில் நட்சத்திர ஓட்டல் இடிந்தது. இடிபாடுகளில் சிக்கி 15 பேர் பலியாகினர்.இந்த நிலையில் அப்ருஷோ மாகாணத்தில் உள்ள பனி மலையிலும் இதுபோன்ற விபத்து நடந்துள்ளது. இங்கு கோம்போபெலிஸ் என்ற பனிச்சறுக்கு மையம் உள்ளது.இங்கு பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட விபத்து காரணமாக சாலை வசதியின்றி வீரர்கள் அங்கு சிக்கி கொண்டனர். பலர் காயம் அடைந்தனர். எனவே அவர்களை மீட்க ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்து வந்தது.

இந்த நிலையில் மீட்கப்பட்டவர்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் பனிமூட்டத்துக்குள் சிக்கியதால் பாதை தெரியாமல் மலை மீது மோதி நொறுங்கி விழுந்தது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததாகவும் அதனால் பனி மூட்டத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply