மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் குடியரசு தின வாழ்த்து
68-வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புடினின் வாழ்த்து செய்தியில், “எனது குடியரசு தின விழா வாழ்த்துக்கள். சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகளை தீர்ப்பதில் உங்களுடைய தேசம் ஆக்கபூர்வமாக முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவுடனான ரஷ்யாவின் வெளியுறவு கொள்கைகளில் நிலவும் சிறப்பான ஒத்துழைப்பிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனித்துவமான வளர்ச்சியில், இந்தியா பொருளாதாரம், சமூகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அளவில் ஏற்படும் பிரச்சனைகளை சரியான வகையில் தனது பங்களிப்பை செலுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply