ஏழு முஸ்லிம் நாடுகளின் மக்களுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடை

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக ஏழு நாடுகளின் மக்களுக்கு அந்நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.இந்த வகையில், ஈரான், ஈராக், சிரியா, லிபியா, யமன், சூடான் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளின் மக்களுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கும் அந்நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாதவாறு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இந்த தீர்மானம் டிரம்பின் தேர்தல் வாக்குறுதியாகவும் ரொய்ட்டர் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் அமைக்கப்பட்டு வரும் மதில் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் டிரம்ப் அறிவிப்புச் செய்துள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply