அமெரிக்கா வெளியேற்றும் அகதிகளுக்கு கனடா பிரதமர் வரவேற்பு

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய ‘விசா’ தடைவிதித்துள்ளார். அகதிகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விமான நிலையங்களில் திரண்டு பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டிரம்பின் இக்கொள்கையை கனடா எதிர்த்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிருடியூ டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், டிரம்பின் இத்தகைய நடவடிக்கை தீவிரவாதம் மற்றும் போருக்கு ஒப்பானது.

அமெரிக்கா அகதிகளை நிராகரித்து அங்கு செல்பவர்களை வெளியேற்றுகிறது. ஆனால் அவர்களை கனடா வரவேற்கிறது.

நீங்கள் (அகதிகள்) எங்கள் நாட்டுக்கு வாருங்கள். மேலும் அகதிகள் பிரச்சினை குறித்து விரைவில் அமெரிக்கா செல்லும் நான் அதிபர் டொனால்டு டிரம்புடன் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மெக்சிகோ மீது அதிபர் டிரம்ப் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அவர் விமர்சனம் செய்யவில்லை. ஏனெனில் கனடாவில் இருந்து 75 சதவீதம் பொருட்கள் அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகின்றன. இதற்கிடையே கனடா பிரதமரின் அகதிகள் வரவேற்புக்கு அந்நாட்டு தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டிரம்பின் ‘விசா’ தடைக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒருவரின் பின்னணி மற்றும் மதம் அடிப்படையில் இது போன்று தாக்குதல் நடத்துவது நியாயமற்றது. ஜெனிவா அகதிகள் சட்டம் போர் நடைபெறும் நாடுகளின் அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply