100 பேருக்கு மரண தண்டனை அளித்த ஐ.எஸ் தீவிரவாதியை ஈராக் மக்கள் தெருவில் அடித்து கொன்றனர்
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க குறிப்பிட்ட சிலரை நியமித்திருந்தனர். அதில் இதுவரை 100கும் மேற்பட்டவர்களுக்கு தலை துண்டித்து மரண தண்டனை வழங்கியவர் அபு சயூப்.இவர் நினைவே பகுதியில் தனியாக சென்று கொண்டிருந்த போது ஈராக்கின் பொதுமக்கள் சிலர் அவரை துரத்தி சென்று சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர்.
நினைவே பகுதியில் வசித்து வரும் அபு சயப் மிகவும் கொடூரமான கொலைகாரர் என கூறப்படுகிறது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பானது வெளியிடும் பிரச்சார வீடியோக்களில் தோன்றி ஆக்ரோஷமாக பேசும் அபு சயப், தாம் மரண தண்டனை விதிக்கும் நபர்களின் தலைகளை சேகரித்து ஒரு குழிக்குள் பத்திரப்படுத்தி வந்துள்ளதாக பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
கோபம் கொண்ட பொதுமக்களால் அபு சயப் படுகொலை செய்யப்பட்டிருந்தாலும், குறித்த சம்பவத்தில் அபு சயபின் எதிரி ஒருவருக்கும் முக்கிய பங்கிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஆனால் அந்த நபர் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மட்டுமின்றி அவருடன் பயணம் செய்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவரும் இந்த தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் அபு சயப் கொலை செய்யப்பட்டது குறித்தும் இருவேறு கருத்துகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கோபம் கொண்ட பொதுமக்கள்ளால் குத்தி கொலை செய்திருக்கலாம் என ஒரு சிலரும், இல்லை அபு சயப் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply