ஜல்லிக்கட்டு :இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் வழக்கறிஞர் அஞ்சலி சர்மா சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல்
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. பின் இந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞரான அஞ்சலி சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது அதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அஞ்சலி தாக்கல் செய்த மனு அனுமதி பெறாமல் தாக்கல் செய்தது என தெரியவந்தது. இதனையடுத்து குறித்த மனுவை உடனடியாக வாபஸ் பெறக்கோரி விலங்குகள் நல வாரிய செயலாளர் ரவிக்குமார் அஞ்சலிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அஞ்சலி சர்மா, தமிழக அரசின் அவசரச்சட்டத்தை எதிர்த்து நான் மனு தாக்கல் செய்யவில்லை, 2016ல் தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால மனுதான் அது.
இதை வாரியத்தின் அனுமதியில்லாமல் தாக்கல் செய்யவில்லை, வாரிய செயலாளர் கடிதம் சட்டப்பூர்வமாக என்னை தடுக்காது. இருப்பினும் அந்த மனுவை வாபஸ் பெற முடியாது என அஞ்சலி சர்மா, தெரிவித்தார்.
தற்போது உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் மனுதாக்கல் செய்ய வழக்கறிஞர் அஞ்சலி சர்மாவுக்கு வழங்கிய அதிகாரத்தை திரும்பப்பெறுவதாக விலங்குகள் நலவாரிய தலைவர் நேகி கடிதம் எழுதி உள்ளார். முன்பு தவறுதலாக அந்த அதிகாரம் வழங்கப்பட்டதாக அஞ்சலி சர்மாவுக்கு எழுதிய கடிதத்தில் நேகி தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையில் ஜல்லிக்கட்டு வழக்கில் இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் வழக்கறிஞர் அஞ்சலி சர்மா உச்சநீதிமன்றத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார்
இந்திய விலங்குகள் நலவாரியம் சார்பில் மனுத்தாக்கல் செய்ய தனக்கு அனைத்து அதிகாரம் உள்ளது என்று அஞ்சலி சர்மா கூறினார் அதிகாரம் வழங்கப்படாமல் தானாகவே மனுத்தாக்கல் செய்துள்ளதாக எழுந்த குற்றசாட்டை தொடர்ந்து கூடுதல் ஆவணங்களை அஞ்சலி சர்மா தாக்கல் செய்து உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply