நாமலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.வாக்குமூலம் பெறுவதற்காக அனுப்பட்ட அழைப்பாணைகளை நாமல் ராஜபக்ச நிராகரித்ததன் மூலம் ஆணைக்குழுவை அவமதித்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

கடந்த வழக்கு விசாரணையில் நாமல் ராஜபக்சவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட போது அதனை அவர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply