புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதுதான் ஒரே தீர்வு : ஜோன் ஹோம்ஸ்

மனித நேயப் போர் நிறுத்தம் அல்லது இலங்கைப் பாதுகாப்புப் படையினர் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஒரு தற்காலிக நிறுத்தம் என்பது நடைமுறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஐ நா கூறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித நேயப் பணிகளுக்கான துணைப் பொதுச் செயலர் ஜோன் ஹோம்ஸ் பிபிசியின் ஆங்கில செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியின் போது இதைக் குறிப்பிட்டார்.

தற்போதைய இராணுவ சூழலை வைத்துப் பார்க்கும் போது, பொதுமக்கள்தான் விடுதலைப் புலிகளுக்கு இருக்கும் கடைசி கேடயம் என்று தோன்றுவதாக கூறிய அவர், தான் ஒரு இராணுவ ஆய்வாளர் இல்லை என்ற போதிலும், அங்குள்ள சூழல் புலிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாகத் தோன்றவில்லை என்றார் அவர்.

இதற்கு ஒரே தீர்வு புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதுதான் என்று ஹொம்ஸ் கூறினார்

மேலும் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு சற்று முன்னதாகவும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர முயன்ற ஆறு பொதுமக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றுள்ளனதாகவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply