அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நெய்ல் கோர்சர்ச் நியமனம்: அதிபர் டிரம்ப் உத்தரவு

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நெய்ல் கோர்சர்ச் நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த அன்டோனின் ஸ்காலியா கடந்த ஆண்டு பிப்ரவரியில் மரணம் அடைந்தார். காலியாக இருந்த அந்த பதவிக்கு அதிபராக இருந்த ஒபாமா, மெர்சிக் கார்லேண்டு என்பவரை நியமித்தார்.

அதற்கு செனட் சபையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. மெஜாரிட்டியாக உள்ள குடியரசு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணியிடம் காலியாகவே இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நியமன அறிவிப்பை வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் இருந்து அதிபர் டிரம்ப் அறிவித்தார். அப்போது நெய்ல் கோர்சர்ச் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆக அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

அதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் சுப்ரீம் கோர்ட்டின் மிக குறைந்த வயது நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தற்போது இவர் கொலொரடோவை சேர்ந்தவர். கொலொரடோ மேல் முறையீட்டு கோர்ட்டு நீதிபதியாக பதவி வகிக்கிறார்.

அதைத்தொடர்ந்து புதிய அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் காலியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பணியிடத்துக்கு நெய்ல் கோர்சர்ச் (49) என்பவரை நேற்று நியமனம் செய்தார்.

அவரது நியமனம் வெளிப்படையானது. அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவரது நியமனத்தின் மூலம் அமெரிக்க மக்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளேன் என டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால், இவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply