ஈரானை சேர்ந்த 5 வயது சிறுவன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது: டிரம்ப் நடவடிக்கை எதிரொலி

ஈரான் வம்சாவளியை சேர்ந்த சிறுவன் வாஷிங்டன் அருகே அமைந்துள்ள விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய நான்கு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து இந்த நடவடிக்கை பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

 

கைது செய்யப்பட்ட சிறுவன் மீது பாதுகாப்பு ஆபத்துக்கள் இருக்கலாம் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் அமெரிக்க குடிமகன் தான் என்பது தெரியவந்துள்ளது. தனது குடும்ப நண்பருடன் வாஷிங்டன் டல்லஸ் விமான நிலையம் வந்த போது அங்கேயே கைது செய்யப்பட்டார்.

 

கைது செய்யப்பட்ட அமெரிக்க குடிமகனான சிறுவனின் தாய் ஈரானை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறுவன் மேரிலாந்து பகுதியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேரிலாந்தில் இருந்து டல்லஸ் விமான விமான நிலையம் வந்த சிறுவனை அழைத்து செல்ல அவரின் தாயார் அங்கு வந்திருந்தார்.

 

‘அமெரிக்காவை பாதுகாப்பாக வைத்து கொள்வது அதிபரின் கடமையாகும். 90 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை நாட்டை பாதுகாப்பாக வைக்க உதவும். வார இறுதியில் மட்டும் சுமார் 109 பேர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்’, என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

சில தினங்களுக்கு முன் அகதிகளுக்கு எதிரான உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு பலரும் எதிர்ப்பு குரல் எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply