டொனால்டு டிரம்ப் தடைவிதிப்பு இஸ்லாமிற்கு எதிரானது கிடையாது : ஐக்கிய அரபு எமிரெட்ஸ்

அமெரிக்க அதிபராக பதவியேற்று உள்ள டொனால்டு டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள் பல்வேறு தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. உலகின் எந்தவொரு நாட்டில் இருந்தும் வரும் அகதிகள், அமெரிக்காவில் நுழைவதற்கு 4 மாதம் தடை. சிரியா அகதிகள், குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நிகழ்கிற வரையில், அதாவது மறு உத்தரவு பிறப்பிக்கிற வரையில் அமெரிக்காவினுள் நுழைய முடியாது. ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடு-களை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தம் என்ற டிரம்பின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

டொனால்டு டிரம்பின் இத்தகைய நடவடிக்கையானது இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கை என்றே விமர்சனம் எழுந்து உள்ளது. அமெரிக்கா மற்றும் உலகின் பிற நாடுகளிலும் டொனால்டு டிரம்பிற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டொனால்டு டிரம்ப் விசா தடைவிதிப்பு இஸ்லாமியர்களுக்கு எதிரானது கிடையாது என ஐக்கிய அரபு எமிரெட்ஸ் தெரிவித்து உள்ளது. சவுதி அரேபியாவின் அண்டைய நாடான ஐக்கிய அரபு எமிரெட்ஸ் அமெரிக்காவின் நட்பு நாடாக காணப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரெட்ஸின் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் அப்துல் பின் ஜயாத் அல் நாக்யான் பேசுகையில், அமெரிக்க நிர்வாகம் குறிப்பிட்ட மத அடிப்படையில் தடையை விதிக்கிறது என்று கூறுவது தவறானது என கூறிஉள்ளார். அமெரிக்கா ஒரு இறையாண்மை முடிவை எடுத்து உள்ளது. ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய நாக்யான், விசா தடை என்பது தற்காலிகமானது தான், உலகின் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply