கட்சிக் கொள்கைகளில் மாற்றம் தேவை : சரத் அமுனுகம

தற்காலத்திற்கு பொருத்தமான வகையில் கட்சிக் கொள்கைகளில் மாற்றம் தேவை என விசேட திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் குறித்து அனைத்து கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் அதிகமான கட்சிகள் அவை ஆரம்பிக்கப்பட்ட காலக் கொள்கைகளையே பின்பற்றி வருகின்றன.

ஜே.ஆர். ஜயவர்தன பண்டாரநாயக்க மற்றும் ரோஹன விஜேவீர கொள்கைகளின் அடிப்படையிலேயே கட்சிகள் காணப்படுகின்றன.

இது ஓர் பிழையான அணுகுமுறை என நான் கூறவில்லை எனினும் அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதைய உலக நடைமுறைகளுக்கு அமைய கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.

தற்காலகத்திற்கு பொருமான ஓர் நாட்டை உருவாக்க புதிய சிந்தனைகளுடன் கட்சிக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும் என அமைச்சர் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply