வன்முறைகளுக்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவேண்டும் : சம்பந்தன்

வன்முறை முரண்பாடு ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாயினும், அந்த வன்முறைகளுக்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவேண்டியுள்ளது என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. எமது நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும்.

மக்கள் சனநாயகத்தின் உண்மையான பயனாளிகளாக இருப்பதற்கு உதவும் சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நாட்டின் சகல மக்கள் மத்தியிலும் இந்த ஆண்டு நல்லிணக்கததைக் கொண்டு வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இது எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களதும் நன்மைக்கு மிக இன்றியமையாததாகும்.

அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் ஏற்பட வாழ்த்துகிறேன் என சம்பந்தன் தனது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply