ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா
அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கான அமெரிக்க விசாவை தடை செய்தார். இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை விதித்தது ஈரான் அரசு. ட்ரம்ப் இவ்வளவு காலம் வேறு உலகில் வசித்துவிட்டு இப்போதுதான் அரசியல் உலகிற்குள் அடியெடுத்து வைத்திருப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காக கடும் கண்டனம் தெரிவித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறும் வகையில் ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. ஆனால், இதனை பொருட்படுத்தாத ஈரான், அனுபவமில்லாத நபரின் அச்சுறுத்தல் பயனற்றது என்று கூறிய ஈரான், எந்த நடவடிக்கையையும் சந்திக்க தயார் என்று கூறியது.
இதனால் கடுப்பான டிரம்ப், ‘ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது. ஒபாமாவை போன்று நான் அல்ல. என்னிடம் நடக்காது’ என காட்டமாக பதிலளித்தார்.
இந்த சூழ்நிலையில், ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சீனா, லெபனான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் உள்பட 12 நிறுவனங்கள், 13 நபர்களை குறிவைத்து இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply