காலிமுகத்திடல் சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை : சுமந்திரன் பங்கேற்பு
காலிமுகத்திடலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இலங்கையின் 69ஆவது சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்கவில்லை. 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவாகிய பின்னர் அவர் தலைமையில் 2015, 2016களில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் பங்கேற்றிருந்தனர். எனினும், இவ்வருடம் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பங்கேற்கவில்லை. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமே நேற்றைய விழாவில் கலந்துகொண்டார்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், திருகோணமலையில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக திருகோணமலை சென்றிருந்தமையால் நேற்று கொழும்பு, காலிமுகத்திடலில் நடைபெற்ற இலங்கையின் 69ஆவது சுதந்திர தின விழாவில் அவரால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply