பிரதமர் மோடி மற்றும் ஆளுநருக்கு நன்றி தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து விரைவில் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இதனை தொடர்ந்து தற்சமயம் முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பியுள்ளார். ராஜினாமா கடிதத்தை தொடர்ந்து தனது பதவி காலத்தில் முறையான ஒத்துழைப்பு வழங்கியமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது.

 

தமிழகத்தின் முதல்வராக நான் பணியாற்றிய காலகட்டத்தில் எனக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதற்கு எனது உண்மையான நன்றியை தெரிவித்து கொள்கிறேன், மீண்டும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை அடுத்து, கடந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதி தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றார். அவரோடு சேர்த்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். தற்சமயம் பதவியை ராஜினாமா செய்திருப்பதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply