முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு: பிரதமர் தலையிட சசிகலா புஷ்பா எம்.பி. கோரிக்கை
சசிகலா புஷ்பா எம்.பி. நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.சட்டசபை அ.தி.மு.க. கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சசிகலாவுக்கு எந்த தகுதியும் கிடையாது. அவர் கட்சிப்பணியோ, மக்கள் பணியோ ஆற்றியது கிடையாது. ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்த போது அவர் சசிகலாவை ஏன் முதல்-அமைச்சராக அறிவிக்கவில்லை? அவர் நினைத்து இருந்தால் இவரை நியமித்து இருக்கலாமே? ஏன் பன்னீர்செல்வத்தை நியமித்தார்?
சசிகலா மீது வழக்கு இருக்கிறது. சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது. கோர்ட்டால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் எப்படி முதல்-அமைச்சராக பதவி ஏற்க முடியும்?
எனவே இந்த பிரச்சினையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, கவர்னர் மூலமாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply