ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் : டாக்டர் சுதா சேஷய்யன்
ஜெயலலிதாவுக்கு மருத்துவ முறைகளுக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கபட்ட்டது. நோய் தொற்றால் ஜெயலலிதா கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்.இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு இருந்தார். மூச்சு விடுவதில் சிரப்பட்டு வந்தார்.நுரையீரல் தொற்று இருந்தது.நோய் தொற்றுக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்தோம்.ரத்ததில் பாக்டீரியா கலந்து பாதிப்பு. ரத்ததில் இருந்த பாக்டீரியா மற்ற உறுப்புகளுக்கு பரவியது. செப்சிஸ் உறுப்புகளை செயலிழக்க செய்தது.இதனால் பாதிப்பு அதிகமானது.சிகிச்சைக்கு கொண்டு வரும் போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தார்.
ரத்த அழுத்தம் சர்க்கரை பாதிப்பு அதிக அளவு இருந்தது. தேர்தலுக்காக கை ரேகை பதிவு செய்தோம்.அப்போது அவர் சுய நினைவுடன் இருந்தார். கையில் டிரிப் ஏறியதால் கைரேகை பதிவு எடுக்கபட்டது.ஜெயலலிதா எங்களிடம் சைகை செய்தார்.தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஜெயலலிதா அறிந்து இருந்தார். டிரிக்கியோஸ்டோமி செய்தபின் அவருக்கு சுயநினைவு திரும்பியது.சுய நினைவு திரும்பியதால் தான் பிசியோ தெரபிக்கு பரிந்துரைக்கப்பட்டது.நோயாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளியை புகைப்படம் எடுப்பது வழக்கமில்லை.ஜெயலலிதாவுக்கு எந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை.ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் பாலாஜி கூறும் போது:-
தேர்தல் தொடர்பான் ஆவணத்தை ஜெயலலிதா படித்து பார்த்தார். 22 ந்தேதி கைரேகை பெறும் போது ஜெயலலிதாசுய நினைவுடன் இருந்தார்.ஆரம்பத்தில் அவர் காய்ச்சலுக்காகதான் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார் சோதனையில் தான் மற்ற பிரச்சினைகள் தெரிய வந்தது.
மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது லேசான மயக்கத்துடன் தான் வந்தார். பின்னர் மருத்துவமனையில் ஒரு வார காலத்தில் எழுந்து பேசினார். உணவு உட்கொண்டார்.
டாக்டர் சுதா சேஷய்யன் கூறியதாவது:-
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்பதப்படுத்தப்பட்டது உண்மைதான். டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு பதப்படுத்தப்பட்டது. 15 முதல் 20 நிமிடம் வரை பதப்படுத்தும் பணி நடைபெற்றது. பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டி இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எம்.ஜி.ஆர். உடலும் இதே போல் தான் பதப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply