இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயற்ச்சி

அமெரிக்காவின் 10 தெற்காசிய நிபுணர்கள் இந்த அறிக்கையை தயாரித்து அளித்துள்ளனர். “பாகிஸ்தானுடனான புதிய அமெரிக்க அணுகுமுறை” என்ற தலைப்பில் இந்த அறிக்கை தயாராகியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத் தாக்குதலை முடுக்கி விட்டு நாட்டை நிலைகுலையச் செய்யும் திட்டமும் காஷ்மீர் விவகாரத்தில் உலக நாட்டு தலையீடு தேவை என்ற கவன ஈர்ப்பைச் செய்வதற்கும் பாகிஸ்தான் ராணுவம் திட்டமிடுவதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்திய – பாகிஸ்தான் தலைவர்கள் மேற்கொள்ளும் அமைதிப் பேச்சு வார்த்தைகளை முறியடிக்கும் நோக்கத்துடன் பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருவதாகவும், இது குறிப்பாக 1999-ம் ஆண்டு கார்கில் போர் மற்றும் அதற்குப் பிறகு அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், ஆப்கன் மற்றும் கூட்டுப்படையினரை எதிர்த்துப் போராடும் சில தீவிரவாதக் குழுக்களை ஆதரித்து வரும் பாகிஸ்தான் தனது இந்தச் செயல்பாடு குறித்து ஒரு போதும் மறுபரிசீலனை செய்யவில்லை, மாற்றிக் கொள்ளவில்லை. இதன் மூலம் பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கான் ஆகிவிடக்கூடாது என்பதற்கான அமெரிக்க முயற்சிகளை பாகிஸ்தான் மறைமுகமாக தடை செய்து வருகிறது.

ஆப்கன் தாலிபான், ஹக்கானி நெட்வொர்க் மற்றும் பிற பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் ஆதரிப்பது மட்டும் ஆப்கானின் பாதுகாப்பு சவால்களுக்கு காரணமல்ல என்பதை அமெரிக்கா அறிந்திருந்தாலும், இந்தக் குழுக்கள் பாகிஸ்தானில் பாதுகாப்பாக செயல்பட்டு வருவது மற்ற பிரச்சினைகளை தீர்ப்பதிலும் சிக்கல்களை தோற்றுவிக்கிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், தீவிரவாதத்தை பாகிஸ்தான் பொறுத்தருள்வது அந்த நாட்டையே சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு கடும் நெருக்கடிகளையும், முதலீட்டுச் சூழலையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் தன் சொந்த நாட்டு அப்பாவி மக்களையே பலி கொடுத்து வருகிறது

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply