ஸ்டாலினை பார்த்து சிரித்தது ஒரு குற்றமா?: சசிகலாவிற்கு பன்னீர் செல்வம் கேள்வி
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக முதல்வர் பன்னீர் செல்வம் முதலமைச்சர் பன்னீர் செல்வம் அதிரடியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். இதனையடுத்து கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து பன்னீர் செல்வத்தை நீக்கி பொதுச் செயலாளர் சசிகலா நடவடிக்கை எடுத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னர் திமுகவின் சதி உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், சசிகலாவின் பேட்டி பதிலளிக்கும் வகையில் பேசிய பன்னீர் செல்வம் கூறியுள்ளதாவது:-
10 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பொருளாளர் பொறுப்பில் ஜெயலலிதா என்னை நியமித்தார். அம்மாவின் மன நிறைவு பெறும் வகையில் பணியாற்றி வந்துள்ளேன். ஜெயலலிதா அளித்த பொருளாளர் பதவியில் இருந்து என்னை அகற்ற தமிழகத்தில் யாருக்கும் உரிமை இல்லை.
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் சிரிப்பு தான். மனிதர்கள் தான் சிரிப்பார்கள், மிருகங்களால் முடியாது. மடியில் கனம் இல்லை. அதனால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு கூறினார்.
அதிமுகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பன்னீர் செல்வம், “தற்போது வரை நான் அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக தொடர்கிறேன் என்றார். மேலும் ஆளுநரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு பொறுந்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply