நாங்கள் ஏன் நிர்பந்தப்படுத்த வேண்டும்: பன்னீர் செல்வம் குற்றச்சாட்டுக்கு சசிகலா மறுப்பு
முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேட்டியை தொடர்ந்து அதற்கு பதிலளிக்கும் விதமாக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:-
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
பன்னீர் செல்வத்துக்கு பின்னால் திமுக உள்ளது. 4 நாட்கள் நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவரும், முதல்வரும் பார்த்து கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர்.
நிர்பந்தப்படுத்தினார்கள் என்று யாரோ சொல்லி அதனை கேட்டு சொல்கிறார். அன்று எங்கள் அருகில் தான் அவர் இருந்தார். நாங்கள் ஏன் அவரை நிர்பந்தப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி பொதுச் செயலாளர் சசிகலா நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply