புலிகளின் தற்கொலைப் படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல்
இன்று அதிகாலையில் (ஏப். 15) புலிகளின் தற்கொலை படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த புலிகளின் இரு தற்கொலைப் படகுகளை அவதானித்த கடற்படையினர் அவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டனர். சம்பவத்தில் ஒரு படகு முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட நிலையில் கடலில் மூழ்கியது. மற்றொரு படகு கைப்பற்றப்பட்டது.
இந்த படகில் இருந்த கடற்புலிகளின் முக்கியஸ்தர்களின் இரு சடலங்கள் உட்பட பத்துச் சடலங்களைக் கடற்படையினர் கைப்பற்றியதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடற்புலிகளின் முக்கிஸ்தர்களான லெப்டினன்ட் கேர்னல் கருணா, பாரத் ஆகியோரின் சடலங்களே இவையென அடையாளம் காணப்பட்டன.
12.7 மி.மீட்டரைக் கொண்ட விமான அழிப்பு ஏவுகணை,எம்.பி.என்.ஜி ரக ஆயுதங்கள்,வெடிபொருட்கள் போன்றனவும் இந்தப் படகிலிருந்து மீட்கப்பட்டன.
இரண்டாவது படகினைக் கைப்பற்றும் முயற்சியின்போது இரு தரப்புக்குமிடையே பாரிய மோதல் ஏற்றபட்டதாகவும் பாதுகாப்புத் தரப்பிலிருந்து தெரிய வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply