எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார் சசிகலா

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை அதிமுக பொதுச் செயலாளர் சசிகாலா நேரில் சந்தித்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அவர் உடன் சென்றனர். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பின் போது அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சசிகலா வழங்கினார். மேலும் தமிழத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆளுநரிடம் உரிமை கோரினார்.

முன்னதாக ஆளுநர் மாளிகை வருவதற்கு முன்பாக மெரினாவில் உள்ள மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து வணங்கினார்.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களால் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சசிகலாவை அப்போது பன்னீர் செல்வம் தான் முன்மொழிந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply