தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்காது:கனடா
இலங்கையில் நீண்டகாலமாக நடந்துகொண்டிருக்கும் மோதல்கள் முடிவுக்கொண்டுவரப்படவேண்டுமென்பதில் கனடா முடிந்தளவுக்கு செயற்பட்டிருப்பதாகவும் எனினும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்குவதற்கான அழுத்தத்தை கனடா பிரயோகிக்காதெனவும் அந்நாட்டு குடிவரவு அமைச்சர் யாசென் கெனி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் பிரச்சினையில் ஒட்டவா தலையிடவேண்டுமேனக்கோரி, கடந்த ஒரு வாரகாலமாக பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் தமிழ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தததுடன், 5 பேர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சட்டபூர்வமானதாக ஏற்றுக்கொள்வதைத் தவிர, இலங்கையில் யுத்தநிறுத்தம் ஏற்படவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோரிக்கை உட்பட அனைத்தையும் கனடா நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் ஊடகவியலாளர்களுக்கு கூறியுள்ளார்.
இரண்டு தரப்பினருக்கும் யுத்திநிறுத்த அழைப்பிற்கான அறிவிப்பை கனடா விடுவிப்பதாகவும், பொதுமக்களுக்குத் தேவையான சர்வதேச உதவிகள் சென்றடைவதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டுமெனவும் யாசென் கெனி கோரினார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply