உண்ணாவிரதம் இருந்த கிருஸ்ணா அம்பலவாணரை காவற்துறையினர் நோயாளர் காவு வண்டியில் மருத்துவனைக்குத் தூக்கிச் சென்றனர்

வன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரட்டத்தை ஆரம்பித்த கிருஸ்ணா அம்பலவாணரின் போராட்டம் காவல்துறையினரின் தலையீட்டை அடுத்து இடைநிறுத்தப்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர் உடனடி மருத்துவ உதவி தேவையென அறிவித்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் உண்ணாநிலைப் போராட்ட இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் அவரைப் பலாத்காரமாக அகற்றினர்.

13.04.2009 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து 15.04.2009 இரவு 8 மணிவரை தொடர்ந்தது.

புதன் மாலை 4 மணிக்கு இவரது உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர் இது தனது மருத்துவ அனுபவ காலத்தில் புதுமையானதென்று கூறி உளவியல் மருத்துவரையும் அழைத்துப் பரிசோதித்தனர். மருத்துவர்கள் இருவரும் இவரது உடல்நிலை மோசமடைந்து செல்வதால் இவர் மேற்கொண்டிருக்கும் உண்ணாநிலைப் போராட்டத்தை உடன் கைவிட்டு மருத்துவம் பெற வேண்டிய நிலையில் இவர் இருப்பதாகத் தெரிவித்தனர். எனினும் கிருஸ்ணா அம்பலவாணர் தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தனது போராட்டத்தை நிறைவு செய்யமாட்டேன் என மறுத்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரின் அனுமதி பெறப்பட்டு காவற்துறையின் அவசர மருத்துவப் பிரிவினர் அழைக்கப்பட்டனர். அவசர மருத்துவப் பிரிவினருடனும் அவர் செல்ல மறுத்தார். இவர்களது சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் முயற்சி நான்கு மணிநேரமாகத் தொடர்ந்தது. இருந்தபோதிலும் கிருஸ்ணா அம்பலவாணர் தனது மறுப்பையே தெரிவித்திருந்தார். இதனையடுத்து காவற்துறையின் அவசர மருத்துவப் பிரிவினர் காவற்துறையினரை அழைத்தனர். காவற்துறையினரின் முயற்சியும் கைகூடவில்லை. இதனையடுத்து காவற்துறையினர் வலுக்கட்டாயமாக நோயாளர் காவு வண்டியில் மருத்துவனைக்குத் தூக்கிச் சென்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply