ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் ஆகவே கூடாது: சுப்பிரமணியசாமி

ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் முதல்- அமைச்சர் ஆகவே கூடாது என்று சுப்பிரமணியசாமி கூறினார்.பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இது மிகப்பெரிய வெற்றி. சுப்ரீம் கோர்ட்டு புது மார்க்கத்தை தந்திருக்கிறது. நீதிபதி அமிதவ ராய், தனியாக ஒரு அறிக்கை தந்திருக்கிறார். ஊழலை தடுக்க தார்மீக பொறுப்பு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இந்த வழக்கில் நான் வாதம் செய்யும்போது, ‘இதைப்போல எல்லா ஊழல் வழக்குகளிலும் வாதிடுவீர் களா?’ என்று அவர் கேட்டார். ‘நிச்சயம் வாதாடுவேன்’ என்றேன். இந்த நாட்டை முன்னேற்றவேண்டும் என்றால் ஊழலை ஒழிக்க வேண்டும். இந்த தீர்ப்பு அதற்கு சாதகமாக இருக்கும்.

சசிகலா உள்ளிட்டோரை உடனே கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி கூறியிருக்கிறார். உடனே என்பதற்கான கால அவகாசம் 24 மணி நேரத்துக்குள் இருக்கும் என நினைக்கிறேன்.

அ.தி.மு.க.வுக்கு தலைமை சசிகலாதான். அவருக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன மதிப்பு இருக்கிறது?. நிர்ப்பந்தத்தினால் ராஜினாமா செய்ததாக அவர் சொல்கிறார். ஒரு முதல்- அமைச்சர் இப்படி சொல்லலாமா? இவரை போன்றவர் கள் முதல்-அமைச்சர் ஆகவே கூடாது.

சட்டப்படி யார் பெரும்பான்மை பட்டியலை கொடுக் கிறார்களோ அவர்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து, சட்டசபையை கூட்டவேண்டும். பெரும்பான்மை பட்டியலை கவர்னரிடம் சசிகலா ஏற்கனவே அளித்து இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்திடம் பெரும்பான்மை பட் டியல் கிடையாது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படும் புதிய தலைவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல சசிகலா புஷ்பா எம்.பி. கூறுகையில், ‘குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக அராஜக போக்கு இருந்தது. அதை யார் தடுப்பது என்ற நிலை இருந்தபோது ஒரு பெண்ணாக இருந்து அத்தனை பிரச்சினைகளுக்கும் நான் குரல் கொடுத்தேன். இந்த தீர்ப்பால் இனி தமிழ்நாட்டில் அராஜகம் இருக்காது, குடும்ப அரசியல் இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. ஜெயலலிதாவிடம் இருந்து அரசியல் அனுபவம் பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். அவரால் சிறந்த முதல்-அமைச்சராக இருக்க முடியும். அவருக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டேன்’ என்று கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply