இலங்கையின் சொகுசு சிறைச்சாலை நிர்மாணப்பணிகள் நிறைவு

3000 மில்லியன் ரூபாய்கள் செலவில் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படும் அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையின் நிர்மாணப் பணிகள் தற்பொழுது முழுமையாக நிறைவடைந்துள்ளது.இதன் நிர்மாணப் பணிகளைப் பார்வையிட கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.

அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலை சகல வசதிகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள அதேவேளை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தரத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சிறைச்சாலை ஆகும்.

விளையாட்டரங்கு மற்றும் விளையாட்டு மைதானத்துடன் கூடியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தச் சிறைச்சாலை, தங்காலை சிறைச்சாலைக்குப் பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

58 ஏக்கர் நிலப் பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தச் சிறைச்சாலையின் நிர்மாணப் பணிகள் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி ஆரம்பமானது. இந்தச் சிறைச்சாலையில் 2000 பேரளவில் தடுத்து வைக்கமுடியும்.

மேலும் சிறைச்சாலை மருத்துவமனை, தொழிற்கல்வி பயிற்சி மையம், கைத்தொழிலுக்குத் தனியான கட்டிடம், அதிகாரிகளுக்கான 140 உத்தியோகபூர்வ அறைகள் மற்றும் 4000 மீட்டர் ஓடுபாதை, 25 மீட்டர் நீளமான விரிவான நீச்சல் தடாகம், உள்ளக விளையாட்டரங்கு, சிறைச்சாலை தயாரிப்புக்களை விற்பனை செய்யும் கட்டிடக் தொகுதி ஆகியன இந்த சொகுசு சிறைச்சாலையில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply