எடப்பாடி பழனிச்சாமி என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம்: மு.க.ஸ்டாலின் நையாண்டி
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நையாண்டியாகக் குறிப்பிட்டுள்ளார்.வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்,” என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே, பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்தபோது, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவரைப் பார்த்து சிரித்தார் என்றும், அப்போதோ அவர் திமுகவுடன் சேர்ந்து சதி செய்வதாத தான் சந்தேகப்பட்டதாகவும் அதிமுக பொதுச் செயலர் சசிகலா பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அதனால்தான், புதிய முதலமைச்சர் தன்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என ஸ்டாலின் நையாண்டியாகக் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசு மட்டுமன்றி, ஏற்கெனவே இருந்த பன்னீர் செல்வம் அரசு, அதற்கு முன்பு இருந்த ஜெயலலிதா அரசு ஆகிய அனைத்துமே மக்கள் விரோத அரசுதான் என்று ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply