பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில் இருந்து இலங்கைக்கு ஒரு படகில் சில பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் பாம்பன் தெற்குவாடி கடற்கரைக்கு விரைந்து சென்றனர். அப்போது முந்தல்முனை கடற்கரையில் நின்று கொண்டிருந்த மீன்பிடி நாட்டுப் படகை சோதனை செய்தனர். அந்த படகில் 9 பைகளில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் இருந்தன. படகின் அருகில் யாரும் பதுங்கி உள்ளனரா என்று தேடிப்பார்த்தபோது யாரையும் காணவில்லை.

 

இதையடுத்து போதை மாத்திரைகளை கைப்பற்றி சுங்கத்துறை வாகனம் மூலம் ஏற்றி ராமேசுவரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

 

இதுகுறித்து சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து போதை மாத்திரைகளை பாம்பனில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற கடத்தல்காரர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

போதை மாத்திரைகள் கடத்துவதற்காக நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகையும் சுங்கத் துறையினர் கைப்பற்றி மண்டபத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply