ஸ்ரீ ல.சு.க. அமைச்சர்களுக்கு ஜனாதிபதி தலைமையில் விசேட செயலமர்வு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட விசேட செயலமர்வொன்று இன்று (18) நீர்கொழும்பில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஸ்ரீ ல.சு.க. யின் உறுப்பினர்களுக்கு இந்த செயலமர்வில் போதிய விளக்கம் அளிக்கப்பட்டதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுனர் மற்றும் அதன் பிரதித் தலைவர் ஆகியோரினால் விசேட சொற்பொழிவும் இந்த செயலமர்வில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply