சட்டசபையில் சபாநாயகர் ஜாதியை முன்னிறுத்தியது கண்ணியத்தை கெடுக்கும் செயல் : விஜயகாந்த்

சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை காணும் போது அவை அனைத்தும் சட்டசபை மரபுகளை முற்றிலும் மறந்து நடைபெற்ற செயல்களாகவே உள்ளது. பதவிக்காகவும், ஆட்சிக்காவும் அதிகாரப் போட்டியில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தனது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன என்பது இந்த நிகழ்வுகளில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. சபாநாயகர் தான் தாக்கப்பட்டதாகவும், தன் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியே வந்து பத்திரிகையாளர் மத்தியில், தனது சட்டை கிழிக்கப்பட்டதாக சபாநாயகர் நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் கூறுகிறார்.

சபாநாயகரை பேசவிடாமல் திமுகவினர் தடுப்பது, அவரது இருக்கையில் ஒருவர் மாறி ஒருவர் அமருவது, மைக்கை பிடுங்கி அவரிடம் நீட்டி பேசு பேசு என அராஜகத்தில் ஈடுபடுவது, கையை பிடித்து இழுப்பது, சட்டையை கிழிப்பது, காகிதத்தை கிழித்து வீசுவது போன்ற சட்ட மன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது, தி.மு.க. என்றாலே தில்லுமுல்லு கட்சி என்றும் ரவுடி கட்சி என்றும் அழைக்கப்படுவதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. சட்டப்பேரவை தலைவர், உறுப்பினர்களால் செயல்படவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் உலகமே பார்த்து கொண்டிருந்த இந்த வேளையில் அவர் தனது சமூகத்தையும், தான் சார்ந்த ஜாதியையும் முன்நிறுத்தி வெளிப்படுத்திய கருத்து சபையின் மாண்பையும், கண்ணியத்தையும் கெடுக்கும் வகையில் உள்ளது. கட்சிகளுக்கும் ஜாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு செயல்பட வேண்டிய சட்டப்பேரவை தலைவர், சாதியை முன்னிறுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்குரியது.

இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டார்கள். தே.மு.தி.க வை சார்ந்தவர்கள் மக்கள் பிரச்சனைக்காக அவையில் குரல் கொடுத்த போது, சஸ்பெண்ட் செய்த இதே சபாநாயகர், இன்றைக்கு அனைவரும் பார்க்ககூடிய அராஜகத்தை அரங்கேற்றிய தி.மு.க.வினரை எத்தனை ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்போகிறார் என மக்கள் கேள்வி எழுப்புவதை கேட்க முடிகிறது. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற கூற்றுப்படி இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் அமைந்திருப்பது நிரூபணமாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply