ஆஸ்திரேலியாவில் என்ஜின் கோளாறால் சிறிய விமானம் விபத்து: 5 பேர் பலி

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்தில் உள்ள பிரபல மால் ஒன்றின் மீது சிறிய விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்பர்னின் புறநகர் பகுதியில் உள்ள எசன்டன் விமானதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் என்ஜின் கோளாறு காரணமாக புறப்பட்ட சிலநிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மாலின் மேற்புறக் கூரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காலை 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததால், அந்த மாலில் மக்கள் யாரும் இல்லை. இந்த விபத்தை அடுத்து அப்பகுதி முழுவதுமே கரும்புகையாக காணப்பட்டது. மேலும் விமானத்தின் உடைந்த பாகங்கள் மாலின் கார் பார்க்கிங் பகுதியில் சிதறிக் கிடப்பதால் அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து எசன்டன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், விபத்து குறித்த விசாரணையை ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாகவும் மெல்பர்ன் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply