விண்வெளி நிலையத்தை முற்றுகையிட்ட வேற்று கிரகவாசிகள்: ‘நாசா’ வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் பூமிக்கு மேல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அப்பணியில் 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 பேர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ‘நாசா’ ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது. அதில் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை அடையாளம் தெரியாத 6 பொருட்கள் வட்டமிட்டு சுற்றுகின்றன.

இதை பூமியில் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த டைலர் கிளங்கனர் பார்த்தார். அதுகுறித்து அவர் கூறும்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தோன்றியதை நான் கண்டறிந்தேன்.

அது விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்து வந்தது. இந்த 6 பறக்கும் பொருளும் மிகப்பெரியதாக இருந்தது. வேற்று கிரகவாசிகள் அவற்றை இயக்கி இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதை ‘நாசா’ மறுத்துள்ளது. லென்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்வாறு தோன்றியுள்ளது. மற்றபடி வேற்று கிரகவாசிகள் இல்லை என தெரிவித்துள்ளது.

ஆனால் இச்சம்பவம் நடந்தபோது நாசா திடீரென வீடியோவை துண்டித்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply