நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி ஸ்டாலின் மனு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது நாளை (புதன்கிழமை) விசாரணை நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கவும், ரகசிய வாக்கெடுப்பு முறையில் புதிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் கோரியிருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்கவும், நம்பிக்கை வாக்கெடுப்பு தினத்தில் பேரவையின் வீடியோ பதிவுகளை முழுமையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் பட்டியலில் இடம்பெறவில்லை. இதையடுத்து இந்த வழக்கை பிற்பகலிலோ, மாலையிலோ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வருவதாலும், மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அல்டமாஸ் கபீரின் நினைவேந்தல் நிகழ்ச்சி மாலையில் நடைபெற உள்ளதாகவும், நாளை காலை முதல் வழக்காக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply