துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே உதவி

இலங்கை துறைமுக அபிவிருத்தியின் பொருட்டு முதலீடுகளை மேற்கொள்வதற்கு நோர்வே அரசாங்கம் தயாரென இலங்கைக்கான நோரவே தூதுவர் Thorbjorn Gaustadsaether தெரிவித்தார்.துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடக பிரிவுடனான விசேட ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் Thorbjorn Gaustadsaether இக்கருத்தை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறியதாகவது,

´நோர்வே என்பது மிகச் சிறிய நாடாகும். இந்நாட்டு துறைமுக கட்டமைப்பின் பொருட்டு இந்தியா, சீனா போன்று மிகப்பெரிய முதலீடுகளை எம்மால் மேற்கொள்வது கடினமாகும். எம்மிடம் துறைமுகம் பற்றிய அறிவு மற்றும் அனுபவம் அதிகமாகும். எம்மிடம் உயர் தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன. விசேடமாக துறைமுகம் தொடர்பாக பல பாடநெறிகள் உள்ளன. தொழில்நுட்பம் ,அனுசக்தி, கொள்கலன்கள் போக்குவரத்து, முனையங்களிலுள்ள தொழிற்பாடுகள் மற்றும் சேவை வழங்கல் இதற்கான சிறந்த உதாரணமாக கொள்ளலாம்.

இலங்கைக்கு தேவையென்றால் குறித்த சில துறைகளில் மாத்திரம் எம்மால் முதலீடுகளை மேற்கொள்ள இயலும். விசேடமாக சூழல் மாசடைதலை தடுக்கும் பொருட்டு எம்மிடம் உயர் தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன. மின்சார உற்பத்தியின் பொருட்டு இயற்கை வாயு குழாய்களை முனையங்களிற்கு அருகாமையில் அமைப்பதற்கான அனுபவம் எம்மிடமுள்ளது. எனவே எம்மால் இவ்வாறான துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளவியலுமென´ அவர் தெரிவித்தார்.

இலங்கையானது பூகோள ரீதியாக முக்கிய இடத்தில் அமையப்பெற்றுள்ள நாடாகும். இதன் காரணமாக கப்பற்றுறை கேந்திர நிலையமாக இலங்கை அபிவிருத்தியடைவதற்கான சந்தர்பம் அதிகமாகும். உலக சந்தையின் போட்டி தன்மையினை எதிர்க்கொள்வதற்கான சக்தி இலங்கைக்குள்ளது.

´நோர்வே கப்பற் நிறுவனங்கள் இலங்கை பற்றி நன்கறிந்துள்ளன. நோர்வே நாட்டின் கப்பல்கள் 19ம் நூற்றாண்டு முதல் இலங்கைக்கு வருகை தருகின்றன. நோர்வே நாட்டு கப்பல் நிறுவனங்கள் இந்நாட்டின் துறைமுக மற்றும் கப்பற்றுறை தொடர்பாக நன்கு அறிந்து வைத்துள்ளன என நான் நினைக்கின்றேன்.

இலங்கையை சிங்கப்பூர் மற்றும் டுபாய் கடல் வழிமார்க்கத்தின் மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்ய வேண்டுமென அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். மெய்யாகவே கப்பற்றுறையிலுள்ள அனைவரும் இவ்வலயம் தொடர்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மீள் ஏற்றுமதியின் பொருட்டு இலங்கை உகந்த இடமா? இலங்கையின் நங்கூரங்கள் அபிவிருத்தியடைந்துள்ளனவா? என அவர்கள் நிரந்தரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதன் காரணமாக துறைமுகத்தை போன்று துறைமுக வசதிகளையும் இலங்கை மேம்படுத்த வேண்டுமென” நோர்வே நாட்டு உயர்ஸ்தானிகரான Thorbjorn Gaustadsaether தெரிவித்தார்.

துறைமுகத்திற்கு மேலதிகமாக துறைமுகத்தில் காணப்படுகின்ற ஒவ்வொரு துறைகளையும் அபிவிருத்திச் செய்வது மிகவும் முக்கியமான காரணமாகும். உலகிலுள்ள பல நிறுவனங்கள் சேவைகளை பெற்றுக்கொள்ளும் போதும் செலவிடுகின்ற பணம் மற்றும் நேரம் முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றது. இலங்கையின் துறைமுகம் மற்றும் கப்பற்றுறையில் முன்னேற்றங்காண வேண்டுமாயின் இத்துறைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்த வேண்டுமென இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjorn Gaustadsaether தெரிவித்தார். நோர்வே கப்பற் நிறுவனங்களில் பணியாற்றும் பொருட்டு இலங்கைகயர்களுக்கு சந்தர்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

´நோர்வே நிறுவனங்களின் கப்பல்கள் உலக அங்கீகாரம் பெற்ற கப்பல்களாகும். இக்கப்பல்களில் பல்வேறு நாடுகளிலிருந்து வருகைத்தந்தவர்கள் பணியாற்றுகின்றார்கள். இலங்கையர்களும் இக்கப்பல்களில் பணியாற்றுவதற்கான சந்தர்பத்தை பெற்றுக்கொள்ளலாம். இவர்கள் தங்களுடைய அறிவை வளர்த்துக்கொள்வார்களாயின் முன்னேற்றம் காண்பதற்கான சந்தர்பங்கள் அதிகமாக காணப்படுகின்றதென´ இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகரான Thorbjorn Gaustadsaether தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply