ஆஸ்கர் விருது விழாவிற்கு செல்ல சிரியா ஒளிப்பதிவாளருக்கு தடை
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரு படத்தில் பணியாற்றிய சிரியா நாட்டு ஒளிப்பதிவாளர் ஒருவர் லாஸ் ஏஞ்சலீஸில் நடக்கவிருக்கும் ஆஸ்கர் விருது விழாவிற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ஒளிப்பதிவாளர் காலித் கதீப்புக்கு அமெரிக்கா விசா அளிக்கப்பட்டுள்ளது ஆனால் அவர் அமெரிக்கா செல்லும் விமானத்தில் செல்ல கூடாது என்று தடுத்து நிறுத்தப்பட்டார் என்று அஸோஸியேட்ட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த ஒளிப்பதிவாளர் குறித்த, தரக்குறைவான தகவல் என்று தாங்கள் விவரிக்கும் விவரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுவதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
மூன்று சிரியா நாட்டின் வைட் ஹெல்மெட் என்ற பெயரில் இயங்கும் மீட்பு பணியாளர்கள் எவ்வாறு துருக்கியில் பயிற்சி பெறுகிறார்கள் என்பதில் இருந்து அவர்கள் போரின்போது முன்னரங்கில் பல உயிர்களை எவ்வாறு காப்பாற்றுகிறார்கள் என்பது வரை அவர்களை பின் தொடர்ந்து எடுத்த ஆவணப்படத்தில் தான் காலித் கதீப் பணியாற்றினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply